Samai/Little Millet
Published on Wed Jul 07, 2021
Overview:
Samai/Little millet is suitable for people of all age groups grown in organic farms. It is rich in phyto-chemicals and it has excellent antioxidant properties. It is also called as ""King of Cereals"". Many dishes of rice can be made in samai.
Benefits:
1.Samai has the highest amount of fiber among cereals,this elimanates the struggle in passing stools.
2.It is rich in Phenolic compound that show antioxidant activity.
3.Prevents prematue ageing.
4.Samai has a low to medium glycemic index thus it is diabetic friendly.
5.Samai is a nutritional powerhouse of good source of protein,fiber,B vitamins,Iron,zinc and magnesium.
6.Detoxifies the body.
Nutritional Value: Based on 100g
Protein.................. 7.7g
Carbohydrate........ 67g
Fat.......................... 4.7g
Minerals................. 1.7g
Fiber....................... 7.6g
Calcium.................. 17mg
Phosphorus............ 220mg
Iron.......................... 9.3mg
Energy..................... 329kcal
Cookery:
1.Samai Kheer
2.Kuzhi paniyaram
3.Idly , Dosa ,Adai.
4.Samai Uthappam.
5.Mixed Rices.
6.Briyani
7.Muruku
கண்ணோட்டம்:
சாமை அனைத்து வயதினருக்கும் இயற்கை பண்ணைகளில் பயிரிட ஏற்றது. இது பைட்டோ-கெமிக்கல்கள் நிறைந்துள்ளது மற்றும் இது சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது "தானியங்களின் ராஜா" என்றும் அழைக்கப்படுகிறது. சாமையில் பல உணவுகள் செய்யலாம்.
பலன்கள்:
1. தானியங்களிலேயே அதிக அளவு நார்ச்சத்து சாமையில் உள்ளது, இது மலம் கழிப்பதில் உள்ள போராட்டத்தை நீக்குகிறது.
2. இது ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டைக் காட்டும் ஃபீனாலிக் கலவையில் நிறைந்துள்ளது.
3. முன்கூட்டிய வயதைத் தடுக்கிறது.
4. சாமை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, எனவே இது நீரிழிவு நோய்க்கு ஏற்றது.
5. சாமை புரதம், நார்ச்சத்து, பி வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல ஆதாரமான ஊட்டச்சத்து சக்தியாகும்.
6. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
Nutritional Value: Based on 100g
Protein.................. 7.7g
Carbohydrate........ 67g
Fat.......................... 4.7g
Minerals................. 1.7g
Fiber....................... 7.6g
Calcium.................. 17mg
Phosphorus............ 220mg
Iron.......................... 9.3mg
Energy..................... 329kcal
சமையல்:
1. சாமை கீர்
2. குழி பனியாரம்
3.இட்லி, தோசை, அடை.
4.சாமை ஊத்தப்பம்.
5.கலவை சாதம்.
6. பிரியாணி
7. முறுக்கு
சமையல் குறிப்பு :
காலை உணவு :
சாமை வெண்பொங்கல்
தேவையான பொருட்கள்:
சாமை - 2 குவளை பாசி பருப்பு - 1 குவளை மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் இஞ்சி - 1 துண்டு கறிவேப்பிலை - 10 இதழ் பெருங்காயம் சிறிது அளவு நெய் - 25ml முந்திரி - 10 உப்பு தேவையான அளவு
செய்முறை : சாமை, பாசி பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி 1 குவளை அரிசிக்கு 3 குவளை தண்ணீர் விதம் 9 குவளை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக வேகா வைக்கவும் .குக்கரில் 5 விசில் விடவும் பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சி,கறிவேப்பிலை ,முந்திரி போட்டு வறுக்கவும்.வேகவைத்த சாமை, பாசி பருப்புடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து கிளறி வறுத்த பொருட்களை சேர்த்தால் சுவையான சாமை வெண்பொங்கல் தயார்.
மதிய உணவு :
சாமை தேங்காய் புலாவ்
தேவையான பொருட்கள் :
சாமை 11/2 குவளை தேங்காய் ஒரு மூடி மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன் பட்டை 2 லவங்கம் 2 ஏலக்காய் 2 சோம்பு 1 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன் வெங்காயம் 4 No பச்சை மிளகாய் 4No புதினா கொத்தமல்லி சிறிதளவு உப்பு தேவையான அளவு
செய்முறை :
ஒரு அகல பாத்திரத்தில் மரச்செக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி பட்டை , லவங்கம் ,சோம்பு ,ஏலக்காய் போடு வதக்கவும் பிறகு நீல வாக்கில் வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் பொன் நிறமாக வதக்கவும் . தேங்காயில் இருந்து தேங்காய் பால் எடுத்து 1 குவளை அரிசிக்கு 3 குவளை தண்ணீர் விதம் 4 1/2 குவளை தேங்காய் பால் ஊற்றவும் .பால் கொதி வந்தவுடன் கழுவிய சாமையை நீர் வடிக்கட்டி போடவும் . 20 நிமிடம் அடிக்கடி கிளறி வேகவைக்கவும் பின்பு கொத்தமல்லி , புதினா,தூவி இறக்கவும் .சூடான மற்றும் சுவையான தேங்காய் பால் புலாவ் ரெடி.
இரவு உணவு :
சாமை இட்லி
தேவையான பொருட்கள் :
சாமை 1 குவளை இட்லி அரிசி 2 குவளை வெந்தயம் 1 ஸ்பூன் கருப்பு உளுந்து 1 குவளை
செய்முறை : சாமை , இட்லி அரிசி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும் , கருப்பு உளுந்து ,வெந்தயம் இவை இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைத்து பிறகு உளுந்தை நன்றாக அரைக்கவும். சாமை , இட்லி அரிசி அரைக்கவும் அரைத்தவுடன் இரண்டையும் நன்றாக கலந்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும் பின்பு இட்லி தட்டில்\என்னை தடவி மாவில் உப்பு சேர்த்து இட்லி ஊற்றவும் 15 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சூடான சாமை இட்லி ரெடி .
Kollu/ Horse Gram
Kollu/Horse Gram is the most -protein rich food found in the planet.It is high …
Vella Cholam/Sorghum/Jowar
Cholam/Jowar/Sorghum is rich in fibre ,antioxidants, protein.This whole grain …
Red Cholam/Jowar(Red)/Sorghum(Red)
Red Cholam/Jowar(red)/Sorghum Red is rich in fibre ,antioxidants, protein.This …